Entertainment
அஜித், சிம்பு இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் சுந்தர் சி
இயக்கம், நடிப்பு என மாறி மாறி கோலிவுட் திரையுலகில் பவனி வரும் சுந்தர் சி கடந்த சில வருடங்களாக இயக்குனராக மட்டும் வலம் வந்தார். அரண்மனை, அரண்மனை 2, கலகலப்பு 2 என வெற்றிப்படங்களை இயக்கி வந்த சுந்தர் சி, விரைவில் ‘சங்கமித்ரா’ படத்தை தொடங்கவுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் சுந்தர் சி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தை வி.இசட்.துரை இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. வி.இசட்.துரை இதற்கு முன்னர் அஜித் நடித்த ‘முகவரி’, சிம்பு நடித்த ‘தொட்டி ஜெயா’, பரத் நடித்த ‘நேபாளி’, ஷாம் நடித்த ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சுந்தரி சி, துரை முதன்முதலாக இணையும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
