லியோ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட சன் டிவி… எங்கே ரிலீஸ் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது சன் டிவியில் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக லியோ படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், அதிகப்படியான ரசிகர்கள் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குவிந்தால் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படும் என்கிற தகவல்கள் லியோ படக்குழுவினருக்கு வந்த நிலையில், அதிரடியாக இந்த முறை இசை வெளியீட்டு விழாவை வேண்டாம் என நடிகர் விஜய் நிறுத்திவிட்டது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இசை வெளியீட்டு விழா ரத்து

இசை வெளியீட்டு விழாவை சன் டிவி நடந்த நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற போதே விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் டிக்கெட்டுகளை வைத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை என புகார் அளித்திருந்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக பல சிக்கல்களை சந்தித்த நிலையில், ஏராளமான ரசிகர்கள் போலி டிக்கெட் உடன் ஏற்கனவே நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்ததால், ஒரிஜினல் டிக்கெட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். நல்ல வேளையாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், அதே போன்று ஒரு சிக்கல் லியோ படத்தின் இசை வெளியிட்டு விழாவிலும் நடைபெறும் என்பதால் தான் அந்த நிகழ்ச்சியை ரத்தானது.

சன் டிவி யூடியூபில் லியோ டிரெய்லர்

வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி லியோபடத்தின் டிரைலர் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லியோ படத்தின் டிரைலர் ஆவது பிரம்மாண்ட நிகழ்ச்சியில் நடைபெறுமா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், தற்போது அக்டோபர் ஐந்தாம் தேதி சன் டிவி யூடியூப் சேனலில் மட்டுமே வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

லியோ படத்திற்கு வேறு எந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கூட நடைபெறாது என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள லியோ திரைப்படம் எந்தவித பிரமோஷனும் இல்லாமல் வெளியானால் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

ஆனால் லியோ படத்தின் டிரைலர் அசுரத்தனமாக இருந்தால், அந்த ஒன்றே போதும் படத்தின் மிகப்பெரிய புரமோஷனுக்கு என விஜய் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...