தமிழகம்
சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்தக்கண்ணன் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்!
கடந்த 90களில் சன் டிவியில் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆனந்த கண்ணன் திடீரென காலமானார். இதனை அடுத்து ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆனந்த கண்ணன் அவர்கள் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக கடந்த 90களில் பணிபுரிந்தார். அவருக்கு குழந்தைகள் உள்பட ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் சிங்கப்பூரில் உள்ள தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆனந்த கண்ணனுக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். புற்றுநோயால் மறைந்த ஆனந்த கண்ணனுக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மற்றும் தொகுப்பாளரான ஆனந்தகண்ணனின் மறைவு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். இயக்குனர் வெங்கட்பிரபு, பாடகி ரம்யா, நடிகர் ஆர்கே சுரேஷ் உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஆனந்த கண்ணன் மறைவு குறித்து தங்களது கண்ணீர் அஞ்சலியை செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
