நம் தமிழகத்தில் தற்போது கோடைகாலம் நிலவுகிறது. அதுவும் குறிப்பாக மே 4ஆம் தேதி தான் நம் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்கி மே 28-ஆம் தேதி வரை தமிழகத்தில் நிலவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 7 இடங்களில் வெயில் சதம் அடித்து உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தின் ஏழு இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 104.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 101.48 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சியில் 100.5 டிகிரி , தஞ்சாவூரில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.