Connect with us

இன்று குறிபார்த்து 12 இடங்களில் சுட்டெரித்த வெயில்!! 100 டிகிரிக்கும் அதிகமாம்;

heat

Tamil Nadu

இன்று குறிபார்த்து 12 இடங்களில் சுட்டெரித்த வெயில்!! 100 டிகிரிக்கும் அதிகமாம்;

எதிர்பாராதவிதமாக வானிலையை அடுத்து சற்று மாற்றியுள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் மே மாதம் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதனால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் சற்று குறைவாகவே நடப்பாண்டில் தெரிந்தது.

இந்த வெயிலின் தாக்கத்தை ஈடுகட்டும் வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதுவும் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் எரிச்சலான சூழ்நிலையை உணர்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 12 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தி பகுதியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, மதுரை பகுதிகளில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தஞ்சாவூர், நாமக்கல் பகுதியில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top