Connect with us

காஞ்சிபுரத்தில் கருணை இல்லாமல் அடித்த வெயில்..!! பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்;

dry weather 1

தமிழகம்

காஞ்சிபுரத்தில் கருணை இல்லாமல் அடித்த வெயில்..!! பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம்;

நம் தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி விட்டது. ஆனால் அக்னி நட்சத்திரம் இன்னும் வரவில்லை. இருந்தாலும் கூட வெயிலின் தாக்கம் என்னமோ அதிகமாக காணப்படுகிறது. இதனால் மக்கள் மதிய நேரங்களில் வெளியே வரமுடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது.

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை காஞ்சிபுரத்தில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டின் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை ஆக இன்று காஞ்சிபுரத்தில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக வரும் வெள்ளிக்கிழமை முதல் வட தமிழ்நாடு மாவட்டங்களில் தரைக் காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக பட்சமாக காஞ்சிபுரத்தில் 108.14 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் இன்னும் வராத நிலையில் இவ்வாறு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது மக்களுக்கு எரிச்சலான உணர்வை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top