News
“நிலக்கரி ஊழல் வழக்கு” மேற்குவங்க முதல்வரின் உறவினர்களுக்கு சம்மன்!!
இந்தியாவில் ஹாட்ரிக் வெற்றி பெற்ற அரசியல் தலைவர் யார் என்று கேட்டால் அனைவரும் தற்போது உள்ள காலகட்டத்தில் கூறுவது மம்தா பானர்ஜி .ஆகும். ஏனென்றால் மம்தா பானர்ஜி தற்போது மூன்றாவது முறையாக மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் மே இரண்டாம் தேதி மேற்கு வங்கத்தில் மீண்டும் தனது ஆட்சியினை தக்க வைத்துள்ளார் மம்தா பானர்ஜி .ஆயினும் அவர் அப்போது மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருவார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் அவருக்கு காலில் மர்மநபர்களால் அடிபட்டதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் தற்போது அவரது குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறபடுகிறது. அதன்படி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நிலக்கரி ஊழல் வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவிக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் நிலக்கரி ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜி செப்டம்பர் 6 ஆம் தேதியும், அவரது மனைவி ரூஜிரா செப்டம்பர் 3ஆம் தேதியும் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அபிஷேக் உட்பட 2 பேர் மீதும் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டி வருவதாக அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.
