Connect with us

என்னதான் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டாலும் பிரபல நடிகருக்கு சம்மன்….

siddharth saina

பொழுதுபோக்கு

என்னதான் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டாலும் பிரபல நடிகருக்கு சம்மன்….

என்னதான் சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டாலும் பிரபல நடிகருக்கு சம்மன்….

திரையுலகில் சிறந்த நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு கடின உழைப்பும், விடா முயற்சியும் உறுதுணையாக இருக்கும். அதன் பின்னர் ஒவ்வொரு நடிகரின் பொறுமையும் அவர்களை உயர்த்தும். எவ்வளவு பெரிய உயரத்திற்கு நடிகர்கள் பலரும் சென்று விட்டாலும் அவர்கள் கூறும் சர்ச்சைக்குரிய பேச்சும், கருத்துக்களும் அவர்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும்.

அவை தான் தற்போது நடிகர் சித்தார்த்திற்கு நிகழ்ந்து வருகிறது. தமிழ் திரையுலகில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் மட்டுமின்றி தென் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் இந்தியாவின் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலுக்கு சர்ச்சையான ட்விட் ஒன்றை செய்துள்ளார். நடிகர் சித்தார்த்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி சர்ச்சை தொடர்பாக நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பி உள்ளோம் என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட் செய்த புகாரில் சம்மன் உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். ட்விட் சர்ச்சை தொடர்பாக வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top