மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அனுப்பிய சம்மன்!

3399d768ed29c5b71f4d0470739c8edd

நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்றில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக திரை உலகில் உள்ள பட்டியலின மக்கள் மீது அவர் பேசிய சில கருத்து சர்ச்சைக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் அடிப்படையில் மீராமிதுனை விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்தனர்.

அந்த வகையில் மீராமிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்மனை ஏற்று மீராமிதுன் போலீசார் முன் ஆஜர் ஆவாராவா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.