வெயிலின் மத்தியில் கோடை மழை! இன்று தென் மாவட்டங்களில் கனமழை!!
தமிழகத்தில் கோடை காலம் என்றால் ஏப்ரல்-மே உள்ளிட்ட இரண்டு மாதங்களை கூறலாம். இந்த நிலையில் நம் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் பல இடங்களில் வெயிலின் தாக்கம் 2,3 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
