பள்ளிகளுக்கு கோடை விடுமுறை: மே 14 முதல் தொடக்கம் !!

கொரோனா பரவல்  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் மாணவர்கல் மத்தியிலும் எழுந்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலனுக்காக குறிப்பாக வெப்பம் அதிகரித்து வருவதால் இந்தாண்டு கோடை விடுமுறை அளிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார்.

அதோடு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறினார்.

அந்த வகையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் மே 14 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் 23 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 24 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment