ஏழைகளின் ஊட்டியில் மே 26ம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்கம்..!!

பொதுவாக தமிழகத்தின் சுற்றுலாத் தளம் என்றால் அனைவரும் கூறுவது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு பகுதிதான்.

இங்கு வருடா வருடம் கோடை விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மே 26ம் தேதி கோடை விழா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி மே 26-ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கோடை விழாவுக்கு ஏற்காடு அண்ணா பூங்காவில் ஐந்து லட்சம் மலர் கண்காட்சி, மாம்பழ கண்காட்சி நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ஏற்காட்டின் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றிக் காண்பிக்க பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment