அதிர்ச்சி! பழம்பெரும் பாடகி சுமித்ரா சென் மரணம்… முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல்!!

கடந்த சில நாட்களாகவே சினி பிரபலங்கள் மரணம் அடையும் நிகழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பழம்பெரும் பாடகி சுமித்ரா சென் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் 89 வயதாகும் இவருக்கு 2 மகள் உள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் வயது முதிர்வு மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி திடீரென உடல்நலக்குறை ஏற்பட்டது.

தீயாய் பரவும் சமந்தாவின் பதிவு; ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

பின்னர் தனியார் மருத்துவ மனையில் மனுமதிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கொல்கத்தாவிற்கு அழைத்து செல்லப்பட்டார். அதே சமயம் இருமல், சளி அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் பாடகி சுமித்ரா சென் இன்று காலை மரணம் அடைந்தார். இவரது மறைவிற்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தளபதி 67 படத்தின் ஷூட்டிங் எப்போது?பிரபல நடிகர் மாஸ் அப்டேட்!!

நீண்ட காலமாகவே அவருடன் தோழியாக பழகி வந்ததாகவும், இவரது மறைவு அதிர்ச்சியை அளிப்பதாக தெரிவித்து உள்ளார். மேலும், கடந்த 2012-ம் ஆண்டில் ‘சங்கீத் மகாசம்மன்’ விருதை மேற்கு வங்க அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.