ஹிமாச்சல் முதல்வராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்பு!!

ஹிமாச்சலத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதிவியேற்றார்.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலானது கடந்த மாதம் ஒரே கட்டமாக நடைப்பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் வாக்கு எண்ணிக்கை பணி நடைப்பெற்ற நிலையில், மொத்தமுள்ள 68 இடங்களில் 40 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது.

அதே சமயம் புதிய முதல்வர் யார் என்பது குறித்த கேள்வியெழுந்தது. இதனால் சிம்லாவில் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து 3 நாட்களாக நடைப்பெற்றது. அதன் பிறகு சுக்விந்தர் சிங் சுகு இறுதியாக தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்..?

இந்நிலையில் முதல்வர் பதிவியேற்பு விழா ராகுல் காந்தி, கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மல்லிக அர்ஜூனா கார்கே, சத்தீஸ்கர் முதல்வர், ராஜஸ்தான் முதல்வர் மற்றும் ஏராளமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அதிர்ச்சி! நேருக்கு நேர் மோதிய பைக்… 2 பேர் பலி!!

அதே சமயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடங்கும் நிலையில் இந்த வெற்றி அவர்களுக்கு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. மேலும், அம்மாநிலத்தின் துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி இவ்விழாவில் பதிவியேற்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.