ஆள் இல்லாமல் தனியாக சில தூரம் டிராவல் செய்த சூட்கேஸ்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு….

பொதுவாகவே இந்த உலகில் பேய் பிசாசு போன்ற விஷயங்கள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகள் என கூறுபவர்கள் கூட ஏதேனும் ஒரு அசாதாரண நிகழ்வை கண்டால் சற்று பீதியடையவே செய்வார்கள். யாராக இருந்தாலும் மனித சக்தியை மீறி நடக்கும் செயல்களை பார்த்து அச்சம் கொள்வது இயல்பு தானே.

அப்படி ஒரு சம்பவம் தான் அமெரிக்க விமான நிலையத்தில் நடந்துள்ளது. விமான நிலையத்தில் மக்கள் அவர்களின் லக்கேஜ்களுடன் டிராவல் செய்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஒரு சூட்கேஸ் மட்டும் ஆள் யாரும் இல்லாமல் சில தூரம் தனியாக டிராவல் செய்து பார்த்திருக்கீங்களா?

அட ஆமாங்க அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏர்போர்ட்டில் சூட்கேஸ் ஒன்று விமான பாதையின் ஓடுதளத்தில் எந்தவித துணையும் இல்லாமல் நேர்கோட்டில் சில தூரம் சென்றுள்ளது. முதலில் இந்த சம்பவத்தை கண்ட விமான நிலைய பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தான் அந்த சூட்கேஸ் தவறுதலாக கீழே விழுந்ததில் சில தூரம் சென்றுள்ளது தெரிய வந்தது.

மேலும் ஒரே நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கும் அந்த சூட்கேஸிற்கு முன்பு பல வாகனங்கள் வந்து கொண்டிருந்தது. அதன் எதிரே ட்ரக் ஒன்று வேகமாக வருகிறது, இதனை பார்த்த பயணிகள் சூட்கேஸ் நிலைமை என்னாகும் என்று ஆச்சரியத்தில் உறைந்தனர். ஆனால் சூட்கேஸ் எதிலும் சிக்காமல் தப்பி சென்றது. உடனே பயணிகள் கைகளை தட்டி ஆராவாரம் செய்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படி தாங்க ஒரு விஷயம் நடந்தால் அது எப்படி நடந்தது ஏன் நடந்தது என்று ஆராயாமல் நாமாகவே ஒரு முடிவிற்கு வரக்கூடாது. சக்கரங்கள் கொண்ட அந்த சூட்கேஸ் கீழே விழுந்ததில் சில தூரம் ஓடியுள்ளது. இதனை கண்டு அது ஏதோ அமானுஷ்யம் என நினைத்தால் எப்படி? அதுக்காக அமானுஷ்யங்கள் இல்லை என்றும் கூற முடியாது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment