பெட்ரோல் விலை குறையாவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் உறுதி! பாஜக மாவட்டத்தலைவருக்கு 15 நாள் சிறை தண்டனை!!

இந்தியாவில் பெரும் பிரச்சனையாக காணப்படுவது பெட்ரோல் ,டீசல் உயர்வாகும். இதனால் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒவ்வொரு மாநில அரசும் போராடி வருகின்றன. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஆர்ப்பாட்டம் செய்த பாஜக மாவட்டத் தலைவருக்கு 15 நாள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன்

அதன்படி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி கைதான பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனுக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி டிசம்பர் 1-ஆம் தேதி பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் என்று ஐயப்பன் கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அச்சம், பகைமை, வெறுப்புணர்வு, தீய எண்ணத்தை உருவாக்கும் விதமாக பேசியதாக ஐயப்பன் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர் பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடர்பாக மீண்டும் டிசம்பர் 17ஆம் தேதி ஐயப்பன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment