பொங்கல் தொகுப்புடன் கரும்பு: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்!

தமிழர்களின் பண்டிகையான பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளில் ரூ.1000 ரொக்கம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கப்படும் என கடந்த 22-ம் தேதி தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்.

இத்திட்டத்தின் மூலம் 2.19 கோடி ரேஷன் அட்டைத்தாரர்கள் பயன்பெறுவர் என்றும் சுமார் ரூ 2,357 கோடி செலவிடப்படுவதாக அரசாணையும் வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும் பொங்கல் தொகுப்பில் கரும் இடம்பெறாமல் இருந்தது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர். இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோக தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, மூத்த அமைச்சர்களுடன் இன்றைய தினத்தில் தமிழக முதல்வர் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பெரியகருப்பன், சக்கரபாணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன் பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக்கரும்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாதாக தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.