பொங்கலுக்கு செங்கரும்பு? – நாளை வழக்கு விசாரணை..!!

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரிய வழக்கின் விசாராணை நாளை வர வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 2023-ம் ஆண்டின் பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம் பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22-ம் தேதி தெரிவித்து இருந்தது. இருப்பினும் தொகுப்பில் கரும்பு இடம் பெறாமல் இருந்தது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பியது.

இதன் காரணமாக அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த சூழலில் கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.

அதில் வருகின்ற பொங்கலுக்கு கரும்பை நல்ல விளைக்கு அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டதாகவும், ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

இதனால் கரும்பு விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாகவும், இது தொடர்பாக பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த மனுவானது நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.