இந்தாண்டு விவசாயிகளிடம் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்யலாம்! தமிழக அரசு உத்தரவு;

தைத்திங்கள் முதல்நாள் நம் தமிழகத்தில் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதி பொங்கல் திருவிழா மிக கோலாகலமாக நடைபெறும்.பொங்கல் திருநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும்.

இதோடு மட்டுமில்லாமல் கரும்புகளும் ரேசன் குடும்பத்தார் அட்டைகளுக்கு இணைப்பாக வினியோகிக்கப்படும். இந்த நிலையில் இந்த முறை கரும்புகளை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகின்ற பொங்கல் திருநாளை ஒட்டி விவசாயிகளிடம் கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு உள்ளது.

பொங்கல் தொகுப்பு பரிசுகளை வழங்க விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யலாம் என்றும் கூறியுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கரும்பு  விவசாயிகளிடம் கொள்முதல் செய்வதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூபாய் 33 ஆக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு கரும்பின் உயரம் ஆறு அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்த ஆண்டு இத்தகைய அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளதால் கரும்பு விவசாயிகள் மிகவும் பயன்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment