பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு… எதிர்கட்சிகளின் போராட்டம் வெற்றி!

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றன.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் தமிழர் திருநாளான பொங்கல் தினத்தில் தமிழக விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு தமிழக அரசு விநியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிமுகவும் இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்பட வேண்டுமென போராட்டம் நடத்தி வருகின்றன என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சற்றுமுன் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்/ இதனை அடுத்து இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான டோக்கன்கள் வரும் 30ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.