நடிப்புல மட்டுமில்ல.. மியூசிக் பண்றதுலயும் சுகன்யா கில்லி தான்.. சுவாரஸ்ய தகவல்!

கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து அதிகம் பிரபலம் ஆனவர் நடிகை சுகன்யா. கடந்த 1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா, கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உள்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் அவர் ரஜினியுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தில் சுகன்யா நடிப்பதாகத் தான் இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் மீனா நடித்தார்.

நடிகை சுகன்யா, பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து மூன்றாவது படமாக அவர் விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

suganya3

இதனை அடுத்து சுகன்யா கதையின் நாயகியாக முக்கிய கேரக்டரில் நடித்த படம் கோட்டைவாசல். அதன் பிறகு சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, பிரபுவுடன் செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்பிள்ளை, சத்யராஜ் உடன் வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் தாலாட்டு என்ற திரைப்படத்தில் நடித்த சுகன்யா, கார்த்திக் நடித்த சின்ன ஜமீன், சீமான், சரத்குமாருடன் கேப்டன், சத்யராஜூடன் வண்டிச்சோலை சின்ராசு போன்ற படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து கமல்ஹாசனுடன் அவர் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்த படம் தான் மகாநதி. இந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து அசந்து போன கமல்ஹாசன், இந்தியன் படத்திலும் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும்படி ஷங்கரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரு கட்டத்தில் அவர் நாயகி வேடத்தில் இருந்து விலகி குணச்சித்திர கேரக்டர் மற்றும் அக்கா அம்மா கேரக்டரில் நடிக்க தொடங்கினார். சூர்யா, ஜோதிகா நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த சுகன்யா, அதன் பின்னர் ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா என்ற திரைப்படத்தில் சத்யராஜ் ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில திரைப்படங்கள் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் அவர் நிறைய படங்கள் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி சுகன்யா தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் அவரது நடிப்பு அசத்தலாக இருக்கும். இதனை அடுத்து அவர் ராஜ் டிவியில் ஆதிபராசக்தி என்ற சீரியலிலும், சன் டிவியில் சூப்பர் குடும்பம், கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றி உள்ளார்.

suganya2

நடிப்பை தாண்டி ஒரு பரதநாட்டிய கலைஞரான சுகன்யா, நிறைய மேடைகளில் நடனமாடி உள்ளார். அதுமட்டுமின்றி அவர் மார்கழி மாதம் நடைபெறும் இசை விழாக்களிலும் பாடியுள்ள அவர், பல பக்தி பாடல்களை இசையமைத்துள்ளார் என்பது பலர் அறியாத தகவலாகும்.

இசையமைப்பாளர், பாடகி, நாட்டிய கலைஞர் என பன்முகம் கொண்ட நடிகை சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரே வருடத்தில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

சுகன்யாவின் திரை உலக சேவையை பாராட்டிய அவருக்கு கலைமாமணி விருதினை தமிழக அரசு வழங்கியுள்ளது. நடிகை சுகன்யாவுக்கு 53 வயதானாலும் தற்போது கூட தனது வயதுக்கேற்ற கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.