காமன்வெல்த் 2022: பாரா பளுதூக்குதலில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சுதிர்!

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.

காமன்வெல்த் போட்டியின் 7வது நாளில் ஆடவர் பாரா பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சுதிர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவர் தனது முதல் முயற்சியில் 212 கிலோ எடையையும் இரண்டாவது முயற்சியில் 212 கிலோ எடையையும் தூக்கி 134.5 புள்ளிகளைப் பெற்று இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும் இப்போட்டியில் நைஜீரிய வீரர் 133.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் ஸ்காட்லாந்து வீரர் 130.9 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

முன்னதாக ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...