Connect with us

ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..; திடீரென்று வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..!

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

ஆவலோடு காத்திருந்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..; திடீரென்று வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை..!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. அதுவும் குறிப்பாக தங்கத்தின் விலையானது நாள்தோறும் தமிழகத்தில் கணிசமாக உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென்று இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வர்த்தகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இடையே பெரும் சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் சென்னையில் 200 ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்துள்ளது. இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரன் ஒன்று ரூபாய் 38896 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேவேளையில் இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக கிராமுக்கு 25 ரூபாய் விலை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூபாய் 4862 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சென்னையில் வெள்ளியின் விலையும் கிராம் 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 69.10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top