Connect with us

திடீரென்று எகிறிய கொரோனா! ஒரே நாளில் 80-ஐ நெருங்கியதால் மக்கள் அச்சம்…!!

கொரோனா

தமிழகம்

திடீரென்று எகிறிய கொரோனா! ஒரே நாளில் 80-ஐ நெருங்கியதால் மக்கள் அச்சம்…!!

கடந்த இரண்டு வாரங்களாக தமிழக மக்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். ஏனென்றால் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு 20 க்கும் கீழ் ஆக பதிவாகி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை என்றே கூறலாம்.

திடீரென்று கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை ஏறுமுகமாக காணப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக இன்று ஒரே நாளில் சுமார் எழுபத்தி ஏழு பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளதாக சுகாதார துறை கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 72 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று எழுபத்தி ஏழு ஆக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது. இருப்பினும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 34 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வேதனையிலும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயால் உயிரிழப்பு ஒன்றும் நிகழவில்லை என்றும் சுகாதார துறை கூறியுள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று ஒரே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top