கடந்த சில நாட்களாக இலங்கையில் பெரும் கலவரம் நிலவியது. அதோடு மட்டுமில்லாமல் இலங்கையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டது. மேலும் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஏனென்றால் இலங்கையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்த உடன் அங்கு கலவரம் வெடித்தது. இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த இத்தகைய பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்றைய தினம் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் அவர் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளைய தினம் 15 பேர் கொண்ட அமைச்சரவை பதவி பிரமாணம் செய்ய உள்ளது. இந்த நிலையில் இலங்கையில் அமலில் இருந்த ஊரடங்கு நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை நாளை காலை 6 மணி முதல் 8 மணிவரை நேரங்களுக்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது