உக்ரைன் நாட்டுக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபரின் மனைவி!!

50 நாட்களுக்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது. இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு விதமான உதவிகளைச் செய்து கொண்டு வருகிறது.

அதுவும் குறிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிதியுதவிகளை அறிவித்து நேரடியாகவே உக்ரைனுக்கு உதவி செய்து கொண்டுவருகிறார். மேலும் உக்ரைன்  இராணுவத்தில் அமெரிக்க  படைகள், ஆயுதங்கள் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இக்கட்டான காலகட்டத்தில் கூட்டணி நாடுகளுக்கு ஆதரவாக இருந்து ரஷ்ய அதிபர் புதினின் திட்டத்தை முறியடிப்போம் என்றும் ஓரிரு நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டில் திடீரென்று ஜோ பைடன் மனைவி சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் திடீரென்று உக்ரைனுக்கு பயணம் சென்றுள்ளார்.

அன்னையர் தினத்தன்று நாட்டுக்கு தான் விரும்பியதாக ஜில் பைடன் தகவல் அளித்தார். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். அமெரிக்க மக்கள் உக்ரைன் மக்களின் பக்கம் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment