ஊழியர்களுக்கு திடீர் எச்சரிக்கை – சம்பளம் ’கட்’ ஆகும்……

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

அந்த வகையில் வரும் திங்கள் , செவ்வாய் கிழமைகளில் அகில இந்திய வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க பல்வேறு மாநில அரசு ஊழியர் சங்கங்களும் முடிசெய்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்ததில் போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்க கூடாது என்றும் விடுப்பு இல்லாமல் வேலைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அன்றைய தினத்தில் லீவு போட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு என பகிரங்க எச்சரிக்கை போக்குவரத்துத் துறை விடப்பட்டுள்ளது.

மேலும் ,  இவற்றை தாண்டி விடுமுறை எடுக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment