காங்கிரஸ் தலைவர் தேர்தலில் திடீர் திருப்பம்!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரையில் யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். இந்நிலையில் யாரும் வேட்புமனுக்களை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே அசோக் கெலாட் போட்டியிலிருந்து விலகிய நிலையில் முகுல் வாஸ்னிக் அல்லது மல்லிகர்ஜுன ஆர்கே மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் சசிதரூர் மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் இன்றைய தினத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு தலைவர்கள் ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மேலும், பலரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்த போதிலும், வருகின்ற 7-ம் தேதி வரையில் பலரும் வேட்புமனுக்களை வாப்பஸ் பெறலாம் என காங்கிரஸ் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment