அதிமுக கவுன்சிலர் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்!!

தமிழகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அந்த வகையில் கரூரில் 12 உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுகவைச் சேர்ந்த 7 பேரும், திமுகவைச் சேர்ந்த 5 பேரும் வெற்றி பெற்றனர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த தனுஷ் என்ற முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில் பல்வேறு காரணங்களினால் சில மாதங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பொங்கல் பரிசு; ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு!

இதனால் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் டிசம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடைப்பெற்றப்போது அதிமுகவை சேர்ந்த எஸ். திருவிகா என்பவர் மர்ம நபர்களால் கடந்தி செல்லப்பட்டார்.

இதனால் காவல்துறையினர் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

பெற்ற குழந்தையை கொன்ற சிறுமி: திருப்பூரில் பரபரப்பு..!!

அப்போது அரசு தரப்பில் திமுகவிற்கு 7 மற்றும் அதிமுகவிற்கு 4 வாக்குகள் கிடைத்திருப்பதாக கூறினார். இதனிடையே கடந்தப்பட்ட அதிமுக மனுதாரர் வாக்களித்திருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறினார்.

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் துணைத் தலைவர்கள் தேர்தல் முடிவினை அறிவித்து கொள்ளலாம் என கூறி கடத்தல் சம்பந்தமான வழக்கினை, திண்டுக்கல் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் விசாரிக்கை வேண்டும் என வழக்கினை முடித்து வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.