ஆடையின்றி வீடியோ கால்.. மடாதிபதி தற்கொலையில் திடீர் திருப்பம்!!

கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சக்கல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருப்பவர் பசவலிங்கம் ( வயது 45). இவர் கடந்த 24-ம் தேதி தீபாவளி பண்டிகையன்று ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரது மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ஒரு பெண்ணுடன் வீடியோ எடுத்து மிரட்டியதாக தெரியவந்தது.

இந்நிலையில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் படி, மடாதிபதி பதவி மற்றும் சொத்து பிரச்சனையில் சிலர் சிக்க வைத்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!!

அதன் படி, மடாதிபதியின் சகோதரரான மிருதுந்ஜெயஸ்ரீ என்பவர் இத்தகைய சம்பவத்தில் ஈடுப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் மிருதுந்ஜெயஸ்ரீ மற்றும் வழக்கறிஞர் மாதேவையாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment