கவின் நடித்த ‘லிப்ட்’ படத்திற்கு திடீரென ஏற்பட்ட சிக்கல்!

1a1905f900c5dbb611bd408ae2c3032e-1

கவின், அம்ருதா ஐயர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலிஸில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த சிக்கல் குறித்து இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈகா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிஃப்ட்’ திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை எனது லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது போல் 50% முன்பணம் செலுத்தி உள்ளோம். மீதி 50 சதவீதம் தொகை படத்தின் வெளியீட்டிற்கு முன் செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது

கொரோனா இரண்டாவது அலைக்கு பின் தியேட்டர்கள் திறந்தவுடன் அக்டோபரில் படத்தை தியேட்டரில் வெளியிடலாம் என முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால் அவர் எங்கள் அழைப்புகளை அவர் எடுப்பதில்லை. இது சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம் 

சங்கத்திலிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் நிறுத்து பட தயாரிப்பாளர் எந்த பதிலும் அளிக்கவில்லை. தற்போது லிப்ட் பட தயாரிப்பாளர் லிப்ரா புரோடக்சன் செய்து கொண்ட ஒப்பந்தம் முறித்து கொள்ளப்பட்டது என தானாக ஒரு வேடிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். ‘லிஃப்ட்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை இன்னும் எங்கள் அகையில் தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.