Connect with us

திடீர் மின்வெட்டால் அப்செட்டான அமைச்சர்: 2 பேர் பணியிட மாற்றம்!!

durai murugan

தமிழகம்

திடீர் மின்வெட்டால் அப்செட்டான அமைச்சர்: 2 பேர் பணியிட மாற்றம்!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு இடங்களில் மின்வெட்டு தொடர்வதாக அதிமுக உட்பட பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாணவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் இந்த பள்ளியில் தான் படித்ததாகவும், இதனால் மலரும் நினைவுகள் பல இருப்பதாக கூறினார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது நீண்ட நேரம் மின்சாரம் வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒன்றும் சொல்லாமல் அமைச்சர் துரைமுருகன் பேச்சை முடித்துக் கொண்டார்.
இந்நிலையில் சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மின் வாரிய உதவி பொறியாளர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top