திடீரென ட்ரைவருக்கு ஏற்பட்ட வலிப்பு. துணிச்சலுடன் 10கி.மீ பேருந்தை ஒட்டிய பெண்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட பெண் பயணி ஒருவர் பேருந்தினை இயக்கி, சக பயணிகளை அவர்களது ஊரில் இறக்கி விட்டுள்ளார்.

அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஷீருர் வேளாண் மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது.

அப்போது ஓட்டுநர் சுதாரித்து பேருந்தை சாலையில் நிறுத்த, பேருந்தில் இருந்த பெண்களும் குழந்தைகளும் செய்வதறியாது கதறி அழுதுள்ளனர்.

அப்போது பேருந்தில் இருந்த யோகிதா சாதவ் என்ற 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிலைமையினைச் சமாளிக்க தான் பேருந்து ஓட்டுவதாகக் கூறி அனைவரையும் சமாதானம் செய்துள்ளார்.

அதன்படி அந்தப் பெண் பேருந்தை ஓட்டியதோடு ஓட்டுநரை அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கச் சேர்த்துள்ளார்.

அதன்பின்னர் பேருந்தில் பயணித்த ஒவ்வொரு பயணிகளையும் அவரவர் ஊர்களில் இறக்கி விட்டுள்ளார்.

நெருக்கடியான நிலையில் தைரியமாகச் செயல்பட்டு அந்தப் பெண் ஏறக்குறைய 10 கிமீட்டருக்கும் மேல் பேருந்தை கவனமாக ஓட்டிச் சென்றது குறித்து சக பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியினை அறிந்த அங்குள்ள மக்கள் யோகிதா சாதவ்வை வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.