அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு திடீர் உத்தரவு!!

அரசு ஓட்டுனர்கள், பணி நேரத்தில் செல்போன் வைத்திருக்க தடை என நாகை போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுனர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதுநாளும், நடத்துனர்கள் ஓட்டுனர் முன் அமர்ந்து அரட்டை அடிப்பது நாளும் விபத்துக்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் வைத்திருக்கக்கூடாது என்று நடத்துனர்களிடம் கொடுத்துவிட்டு பணி முடிந்த பிறகு திரும்ப பெற வேண்டுமென நாகை போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் பகல் நேரங்களில் ஓட்டுனர்களும் அருகில் இருக்கையில் அமர கூடாது என்றும் கடைசி இருக்கையில் அமர்ந்து அவரது பணிகளை மேற்கொள்ளும் படி கூறியது.

இவற்றை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment