22% வரை ஈரப்பத நெல் கொள்முதல்: தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்..!!

விவசாயிகளிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி நெல் கொள்முதல் செய்ய இருப்பதாகவும், ஏற்கனவே 1,431 நெல் கொள்முதல் நிலையங்களில் 4.6 மெட்ரிக்டன் வரையில் ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 22 சதவீத வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாய அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கு ஒப்புதல் வழங்க கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய கடித்தத்தின் மூலம் ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து, இது தொடர்பாக குழு அமைக்கும் என மத்திய அரசின் உணவு பொருள் வழங்கல் துறைச் செயலாளருக்கு, தமிழக உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment