ஊட்டியில் திடீர் மண்சரிவு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

நீலகிரியில் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பகுதி மண்சரிவு ஏற்பட்டது.

குறிப்பாக 13-வது கொண்டை ஊசி வளைவில் மரங்கள் சாய்ந்து பாறைகள் உருண்டு வந்ததால் வாகன ஓட்டுகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதே சமயம் நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணை துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் மரங்கள் விழுந்தது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும், மண் சரிவின் போது மலைப்பகுதியில் வாகன ஓட்டிகள் செல்லாமல் இருந்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.