ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் திடீரென நடந்த சம்பவம்! கொதித்து எழுந்த ரசிகர்கள்!

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரவு 10 மணி கடந்து நிகழ்ச்சி நடந்த போது காவல்துறை அதிகாரி மேடையில் ஏறி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.

மராட்டிய மாநிலத்தில் நடந்த ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதற்கு ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள். ராஜ் பகதூர் திறந்த அரங்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இரவு 10 மணி கடந்து நிகழ்ச்சி நடந்த போது காவல்துறை அதிகாரி மேடையில் ஏறி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திருக்கிறார். நிகழ்ச்சியின் கடைசி பாடலை ஏ ஆர் ரகுமான் பாடிக் கொண்டிருந்தபோதே அவரை காவல்துறை தடுத்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது.

கடைசி பாடலை பாடி முடிக்கும் வரை போலீசார் அமைதி காத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.