Connect with us

திடீரென்று மேட்டூர் அணையில் உயர்ந்த நீர்வரத்து!! பொதுமக்கள் அச்சம்;

மேட்டூர் அணை

தமிழகம்

திடீரென்று மேட்டூர் அணையில் உயர்ந்த நீர்வரத்து!! பொதுமக்கள் அச்சம்;

சில நாட்களுக்கு முன்பு வரை மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறப்பு நிகழ்ந்தது. காரணம் மேட்டூர் அணைக்கு வந்த நீர்வரத்து அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிதீவிரமாக காணப்பட்டது.

இதன் விளைவாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டுமளவிற்கு நிரம்பியது. இதனால் அதன் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.

இந்த நிலையில் திடீரென்று மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. அதன்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியில் இருந்து 40 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 கனடியாகவும் நீர் திறப்பு 93.47 டிஎம்சி ஆகவும் உள்ளது,நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடியும் 16 கண் பாலம் வழியாக 17,000 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top