திடீர் விலை வீழ்ச்சி! ஒரு வழியா இறங்கிய தங்கம்; கொண்டாட்டத்தில் மக்கள்!

நாம் தினந்தோறும் சென்னையின் தங்கம் மற்றும் வெள்ளியின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு வருகிறோம். கடந்த சில நாட்களாகவே சென்னையில் தங்கத்தின் விலை அதிகமாக விற்கப்படுகிறது.

தங்கம்

இதனால் வர்த்தகர்கள், வணிகர்கள் என அனைவரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களை மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது தங்கத்தின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 216 குறைந்துள்ளது.இதனால் சென்னையில் ஒரு கிராம் தங்கம் 4514 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மட்டும் இல்லாமல் தற்போது வெள்ளியின் விலையும் சற்று குறைவாக விற்கப்படுகிறது.

அதன்படி சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 68.70 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  இதனால் இல்லத்தரசிகள் வர்த்தகர்கள் வணிகர்கள் என அனைவரும் பயனடைவர்.

ஏனென்றால் கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறையாமல் உயர்ந்து கொண்டே இருந்த நிலையில்  இத்தகைய விலை வீழ்ச்சி அவர்களுக்கு மிகுந்த சந்தோசத்தை உருவாக்கி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment