ஆஸ்திரேலியாவில் திடீர் வெள்ளம்-10000 பேர் சிக்கியிருக்கலாம்! மீட்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலிய ராணுவத்தின் ஹெலிகாப்டர்!!
மனிதன் நாள் தோறும் பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கிறான். அவன் அதையும் தாண்டி இயற்கையின் வானிலையை கணித்துக் கொண்டு வருகிறான். ஆனால் இயற்கை சீற்றத்தை மனிதனின் முயற்சிகள் தடுக்க முடியவில்லை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகிறது.
அதனைப் போல் தற்போது ஆஸ்திரேலியாவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் காரணமாக ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆஸ்திரேலிய ராணுவ ஹெலிகாப்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வீடுகளின் கூரைகள், மேல் பாலங்களில் தவிப்போரை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆஸ்திரேலியா வெள்ளத்தில் சுமார் பத்தாயிரம் பேர் சிக்கி உள்ளதாகவும் அந்த பத்தாயிரம் பேரை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
