
செய்திகள்
ஓடும் ரயிலில் திடீர் தீ: பீகாரில் பரபரப்பு!!
பீகாரில் ஓடும் ரயிலில் தீப்பற்றி எரிந்ததால் ரயிலில் இருந்து பயணிகளை இறக்கி விடப்பட்டனர். அதோடு இந்த தீ விபத்தால் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் பீகாரில் இயங்கும் பெல்வா ரயிலானது எதிர்பாராதவிதமாக இன்ஜினில் தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதேபோல் இன்ஜினில் பற்றிய தீ ரயில் பெட்டிகளுக்கு பரவுவதை தடுக்கும் விதமாக தீயை அணைக்கும் விதமாக தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடும் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது
