ஆளுநர் மாற்றம்? தமிழிசை சவுந்தரராஜனின் திடீர் முடிவு!!
தெலுங்கானா முதலனைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இடையே மோதல் போக்கு நீடித்து வருவதால் டெல்லி சென்றுள்ள ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தெலுங்கானா சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையினை ரத்து செய்தது முதல் பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் ஆளுநர் தமிழிசையை முதலனைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருகிறார்.
குறிப்பாக அரசியல் நிகழ்ச்சிகளில் தாம் தொடர்ந்து புறக்கணிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருடன் தமிழிசை முறையிட்டதாக தாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆளுநர் தமிழிசை திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசியதாக தெரிகிறது. இதனிடையே தெலுங்கானாவில் இருந்து தமிழிசையை விடுவித்து பாஜக ஆளும் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்க ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கேரள ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானை தெலுங்கானாவுக்கு மாற்றிவிட்டு தமிழிசையை கேரள ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றனர்.
