திடீரென்று உயர்ந்த கொரோனா பாதிப்பு! புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன? நாளை முதல்வர் ஆலோசனை;

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருந்தன. அவை பின்னர் கட்டுப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் திடீரென்று கட்டுப்படுத்தப்பட்ட கொரோனாவின் பாதிப்பு மீண்டும் உயர தொடங்கிவிட்டது.

கொரோனா

அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்றையதினம் 296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறைக்கு வரலாம் என்றும் பேசப்படுகின்றன.

இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து நாளைய தினம் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளைய தினம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடு விதிப்பது குறித்து ஆலோசனை என தகவல் கிடைத்துள்ளது. இதனால் நேரடி வகுப்புகளுக்கு பதில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. WHO தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்ட நிபுணர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment