Connect with us

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திடீர் கோளாறா?

Tamil Nadu

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திடீர் கோளாறா?

f25fa0df4b7ae739fca4a77fe2779b3d-1

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் இன்று முதல் நடைபெற்று வரும் நிலையில் திடீரென விராலிமலை அருகே உள்ள ஒரு தேர்வு மையத்தில் சர்வர் கோளாறு காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலையில் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி கொள்குறி வகையிலான கணினி வழித் தேர்வு ஆகஸ்ட் 16, 17, 18 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் விரிந்துரைக்கும் வகை தேர்வு ஆகஸ்ட் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏற்கனவே கூறியிருந்தார் 

இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் கொள்குறி வகையிலான தேர்வு கணினி வழியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென விராலிமலை இலுப்பூர் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு வந்த 200 மாணவர்கள் சர்வர் கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத வழிவகை செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top