ஷாக் நியூஸ்! சந்திரமௌலி ரெட்டி திடீர் மரணம்..!!

திருப்பதி அறங்காவலர் குழு அதிகாரி தர்மா ரெட்டியின் மகன் சந்திர மௌலி ரெட்டி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோயில். இந்த கோவிலில் நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் வந்துசெல்வது வழக்கம். இந்நிலையில் கோயிலில் அறங்காவலர் குழு அதிகாரியாக இருப்பவர் தர்மா ரெட்டி.

பெற்றோரின் அன்பு கிடைக்காத விரக்தி.. பிளஸ் 2 மாணவி தற்கொலை..!!!

இவருக்கு சந்திர மௌலி ரெட்டி என்ற மகன் இருப்பதாக தெரிகிறது. இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் ரெட்டியின் மகளுக்கும் வருகின்ற ஜனவரி 26-ந் தேதி சென்னையில் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சந்திர மௌலி ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கேரளாவில் வினோதம்: டிவி ரிமோட் பேட்டரியை விழுங்கிய 2- வயது குழந்தை..!!!

அப்போது சந்திர மௌலி ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது சிகிச்சை பலனின்றி காலை 8.30 மணியளவில் உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் வாயிலாக தெரிவித்துள்ளது. மேலும், இவரது மரண செய்தியானது ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.