நடிகர் விஷால் நடித்த சக்ரா திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீஸாகும் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் வெகுவிரைவில் ஓடிடி ரிலீஸ் ஆவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் மக்கள் பயமின்றி திரையரங்குகளுக்கு வரத் தொடங்கி விட்டார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது
இதனை அடுத்து ஓடிடி ரிலீஸ் முடிவை ரத்து செய்த சக்ரா படக்குழுவினர் தற்போது சக்ரா படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து விநியோகஸ்தர்களிடம் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
அனேகமாக பிப்ரவரி 14ஆம் தேதி சக்ரா படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது