தமிழகம்
ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்: இனிமேல் சொந்த கட்டிடம் தான்!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
தமிழகத்தில் தற்போது 6,970 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் அனைத்தையும் சொந்த இடத்திற்கு மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து கூட்டுறவு சங்க இணை பதிவாளர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் 6,970 கடைகளுக்கு தேவையான இடங்கள் வாங்கப்பட்டு அதன் பின்னர் கட்டிட பணிகள் தொடங்கப்படும் என்றும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சொந்த கட்டிடத்தில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
