இசைக்குயில் மறைவிற்கு மணற்சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்திய சுதர்சன் பட்நாயக்..

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படுபவர் லதா மங்கேஷ்கர். கடந்த கொரோனா தொற்று ஏற்ப்பட்டு  மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் நேற்று காலையில் மரணமடைந்தார்.

இவரது மரணத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி,ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கல் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இவரது மறைவிற்கு 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டு நேற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் செலுத்தும் விதமாக ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் செதுக்கி  அஞ்சலி செலுத்தினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment