பாலாஜி வேண்டாம்… ஆரிக்கு ஓட்டு போடுங்க!!! திடீரென பல்டி அடித்த சுசித்ரா!

5dc9f61e69cccc5cb7018bc48dee65ef

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ராவும், பாலாவும்  நெருங்கிய நண்பர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சுசித்ரா பாலாவுடன் நெருங்கிய நண்பராக பழகி வந்தார். ஆனால் இரண்டு வாரத்திலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். 

இந்நிலையில் பிக் பாஸ் சுசித்ரா தற்போது ஒரு பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறுகையில் “பிக்பாஸில் இந்த முறை ஆரி ஜெயிக்க வில்லை என்றால். அது அவருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி. நீங்கள் அவருடைய ரசிகரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் தயவு செய்து அவருக்கு ஓட்டு போடுங்கள். நிஜ வாழ்க்கை ஹீரோ அவர்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.