Connect with us

மாஸ்டர் குட்டி பவானிக்கு இப்படி ஒரு சோகமா… என்ன கொடுமை சார் இது!

mahendran 1

பொழுதுபோக்கு

மாஸ்டர் குட்டி பவானிக்கு இப்படி ஒரு சோகமா… என்ன கொடுமை சார் இது!

மாஸ்டர் குட்டி பவானிக்கு இப்படி ஒரு சோகமா… என்ன கொடுமை சார் இது!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் யாரும் பின்னாளில் பெரிய ஹீரோவாக ஜொலிப்பதில்லை. ஆனால் சிலர் வெற்றி பெற்று டாப் ஹீரோவாக கூட வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் ஒரு ஹீரோவாக உயர போராடும் நடிகர் தான் மகேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நாட்டாமை படத்தில் இவரின் நடிப்பு தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து கடந்தாண்டு பொங்கலுக்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறிய வயது விஜய் சேதுபதியாக குட்டி பவானியாக மகேந்திரன் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. நிச்சயம் அந்த படத்தை தொடர்ந்து இவருக்கு ஹீரோ வாய்ப்பு கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் இல்லையாம். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “நிறைய பேர் நான் நல்லா நடிக்கிறேன். சீக்கிரம் பெரிய ஆளா வருவேன்னு சொல்றாங்க. ஆனா, அவங்க நினைச்சா எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை அமைத்து தர முடியும். உண்ணால நிச்சயம் முடியும்னு சொல்ற அவங்க ஏன் எனக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறாங்கனு தெரியல.

சின்ன வயசுல என் படம் ஓடுன தியேட்டர் உரிமையாளர், தம்பி நீ சூப்பரா நடிக்குறனு என்கிட்ட சொன்னாரு. ஆனா இப்போ என்ன வச்சு படம் எடுக்குற தயாரிப்பாளர் கிட்ட போய் என் பேர சொல்லி அவன வச்சு படம் பண்ணாதீங்க. அவனுக்கு மார்க்கெட் இல்லன்னு சொல்றாரு. அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

சமீபத்துல கூட ஒரு தமிழ் இயக்குனர் வீட்டு வாசல் முன்னாடி வாய்ப்பு கேட்டு காலையில இருந்து சாயங்காலம் 6 மணி வரைக்கும் நின்னேன். நான் நிக்குறது அவங்களுக்கு தெரியும். சிசிடிவி கேமரா வழியா என்ன பார்த்துட்டு தான் இருக்காங்க. சாயங்காலம் எதுவுமே தெரியாத மாதிரி மகேந்திரன் நல்ல நடிப்பான் அவன்கிட்ட போட்டோ வாங்கிட்டு அனுப்புங்க. நல்ல கேரக்டர் வந்ததும் கூப்பிடலாம்ன்னு சொல்றாங்க. ரொம்ப வேதனையா இருக்கு” என கூறியுள்ளார்.

மாஸ்டர் படம் மட்டுமல்ல குழந்தை நட்சத்திரமாக மகேந்திரன் நடித்துள்ள அத்தனை படங்களிலும் அவரின் நடிப்பு அனைவருக்கும் தெரியும். ஒரு சிறந்த நடிகருக்கே இந்த நிலைமையா என மகேந்திரனின் பேட்டியை கண்ட பல ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top